இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர்

x

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்த இன்று கொண்டாடுகிறார்.

பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் காலை 8 மணியளவில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், 8 முப்பது மணி அளவில் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துவதுடன், தாயார் தயாளு அம்மாவை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். பின்னர், சி.ஐ.டி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார். தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளார். மேலும் அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்