திருவிழாவில் ஏற்பட்ட மோதல் - பீர்பாட்டிலால் இளைஞர்க்கு நேர்ந்த கொடூரம் - அதிர வைக்கும் வாக்குமூலம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், கடந்த நவம்பர் மாதம் முதல் காணவில்லை என கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த லாலு, பூவரசன், வாசுதேவன் மற்றும் அருண்குமார் ஆகிய நால்வரை கைது செய்த போலீசார், அவர்களின் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மயிலேறும் திருவிழாவில், இளவரசனுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 6 ஆம் தேதி கிராமத்தில் வைத்து மது அருந்தி கொண்டிருந்த நால்வரும், அவ்வழியே சென்ற இளவரசனிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டிலால் குத்தி கொன்றது தெரியவர, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளைஞரின் உடலை நால்வரும் திருப்பாற் கடல் பாலாற்றில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், இளவரசனின் சடலத்தை மீட்ட போலீசார், நால்வரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்