ஊரே கொண்டாடும் மீனாட்சி திருக்கல்யாணம்... 108 தட்டுகள் வந்த சீர்வரிசை

x
  • ஊரே கொண்டாடும் மீனாட்சி திருக்கல்யாணம்... 108 தட்டுகள் வந்த சீர்வரிசை
  • சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
  • திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யான நிகழ்ச்சி பெரும் விமரிசையாக நடைபெற்றது.
  • தேனி, சிலமலை கிராமத்தில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணத்தை, கிராமத்து உறுமி மேளம் கொட்ட... தேவராட்டம், ஒலியட்டம் என 108 தட்டு சீர்வரிசையுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து சிறப்பித்தனர்.
  • திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்ச விழாவை முன்னிட்டு, தமிழ் கடவுள் முருகனுக்கு தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாட வீதியில் குதிரையில் உலா வந்த முருகனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், சித்திரை திருவிழா கொண்டாட்டமாக மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்