சென்னை மெட்ரோ.. 7 ஆண்டாக ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு.. RTI-யில் அம்பலம்

x

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் கோரி, 12 முறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ (RTI) ஆர்வலரான தயானந்த் கிருஷ்ணன் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தொடர்பான சில தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்றுள்ளார். இதன்படி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக கடந்த 2017ம் ஆண்டு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்தும், 7 ஆண்டுகளாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு பிப்ரவரி 2019 முதல் ஜூன் 2023 வரை 12 முறை கோரிக்கை கடிதம் அனுப்பியும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்பது தெரிகிறது. மத்திய அரசின் நிதி வளங்கள் பொறுத்து திட்டத்தின் ஒப்புதல் சார்ந்துள்ளது என்ற பதிலை பல ஆண்டுகளாக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்