12ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் - போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சென்னை, சவுகார் பேட்டையை சேர்ந்த தர்மேந்திர கோத்தாரி என்பவர், கடந்த 2012ல் சுமார் 2.3 கிலோ தங்கத்தை அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் செக்யூரிட்டி லாக்கரில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில், லாக்கரில் இருந்த நகைகள் திடீரென திருடு போனதாக கூறி நிறுவன ஊழியர்கள் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திர தாதா மற்றும் சுரேந்திர தாதா ஆகியோர் நகைகளை மோசடி செய்துவிட்டதாக தர்மேந்திர கோத்தாரி போலீசில் புகாரளித்துள்ளார். விசாரணையில், 6 மாதங்களுக்குள் நகைகளை திருப்பி தந்துவிடுவதாக கூறி கையெழுத்திட்ட இருவரும், பின்னர் ஒரு சில நகைகளை மட்டும் கொடுத்து விட்டு தன்னை ஏமாற்றியதாக தெரிவித்த தர்மேந்திரா, வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடித்து விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து, 12 வருடங்களுக்கு பிறகு வழக்கை மீண்டும் கையிலெடுத்த போலீசார், சவுகார் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்