ஹைடெக் சிட்டி சென்னைக்கா இந்த நிலைம? - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு அடித்த ஜாக்பாட்.. ஷாக் ரிப்போர்ட்

x

நாள்தோறும் கோடிக்கணக்கான பயணியகளை கையாளும் சென்னை விமான நிலையம் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் வகித்து வருகிறது.

ஆனால், சமீப காலமக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சிரியம் ஆய்வு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் விமான எரிபொருள் விலை அதிகம் என்பதாலும், சர்வதேச விமான சேவைகளுக்கு தேவையான ஏரோ பிரிட்ஜ்கள்

பற்றாக்குறையுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது அதாவது, 2019 பிப்ரவரியில், கொரோனாவிற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை 6,682ஆக இருந்தது. 2024 பிப்ரவரியில் 5,678ஆக 15 சதவீதம் குறைந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின், சென்னை - டெல்லி விமான

சேவைகளின் எண்ணிக்கை 2019ல் 140ஆக இருந்து தற்போது 116 ஆக குறைந்துள்ளது. ஏர் இந்தியாவின், சென்னை - ஹைதராபாத் விமான சேவைகளின் எண்ணிக்கை 36ல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல், இண்டிகோ நிறுவனத்தின் சென்னை- பெங்களூர் விமான சேவைகள் 187ல் இருந்து 174ஆகவும், சென்னை - கோவை இடையேயான விமான சேவை 176ல் இருந்து 145ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

2019 பிப்ரவரியில் கேத்தே பசிபிக் நிறுவனத்தின் சென்னை - ஹாங்காங் விமான சேவைகளின் எண்ணிக்கை 24-ஆக இருந்தது. ஆனால் தற்போது,12 ஆக பாதியாக குறைத்து விட்டது.

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், சென்னை கொழும்பு விமான சேவைகளை, 112ல் இருந்து 82 ஆக ௩௦ சதவீதம் குறைத்துள்ளது.

சென்னை பிராங்க்பாட் விமான சேவைகளின் எண்ணிக்கையை 7-ல் இருந்து 5-ஆக குறைக்கப் போவதாக லூஃப்தான்ஸா நிறுவனம் அறிவித்துள்ளது.

தனியார்மயமாக்கப்பட்டுள்ள பெங்களூரு, ஹைதராபத் விமான நிலைங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதால், பல்வேறு விமான சேவை நிறுவனங்கள், அங்கு விமான சேவைகளை அதிகரித்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்