போதை நேரே போலீசில் சிக்கிய நபர்... பைக்கில் சிக்கிய பண்டல்... சென்னையில் பரபரப்பு

x

மதுபோதையில் பைக் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய இளைஞரிடம் இருந்து, சுமார் 10 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, இளையான்குடியை சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன். ரிச்சி தெருவில் உள்ள லேப்டாப் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வரும் இவர், சம்பவத்தன்று முத்தியால்பேட்டை பகுதியில் மதுபோதையில் பைக்கில் சென்று போலீசாரிடம் சிக்கி இருக்கிறார். சோதனையில் உரிய ஆவணங்களின்றி சுமார் 10 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை, இளைஞர் பைக்கில் மறைத்து வைத்திருந்தது தெரியவர, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வருமானத் துறை அதிகாரிகளிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்த நிலையில், இளைஞரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்