திருடிய பைக்கை தள்ள முடியாமல் தவித்த காதலன்... ஓடி வந்து உதவிய காதலி - சென்னையில் இரவில் உலாவரும் காதல் புறாக்கள்

x

காதலியுடன் வந்து விலையுயர்ந்த பைக்கை திருடி செல்லும் போதை ஆசாமியின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அசோக் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் என்பவர், கடந்த 15-ந்தேதி தனது விலையுயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் மொபட்டில் வந்து பைக்கின் சைடு லாக்கை உடைப்பதும், காதலியுடன் சேர்ந்து போராடி பைக்கை தள்ளிக்கொண்டு செல்வதும் தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்