சென்னையில் பிடிபட்ட சார்.. சிக்கியது டீச்சரின் எலும்புகள்

x

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வெங்கடேசன் மற்றும் தீபா ஆகிய 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் திடீரென மாயமாகினர். இந்நிலையில் திடீர் திருப்பமாக ஆசிரியர் வெங்கடேசனை சென்னையில் கைது செய்த போலீசார், பெரம்பலூரில் கொண்டுவந்து விசாரித்தனர். அப்போது தீபாவை பெரம்பலூரில் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதுக்கோட்டையில் எரித்து விட்டதாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து புதுக்கோட்டையில் கைரேகை, தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் விரைந்த நிலையில், சில எலும்புத்துண்டுகளை மீட்டுள்ளனர். அது தீபாவின் எலும்புதானா அல்லது வேறு ஏதாவது எலும்புகளா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்