சென்னையில் நடுரோட்டில் இருசக்கர வாகன ஓட்டியை வெட்ட அரிவாளுடன் துரத்திய பேருந்து ஓட்டுநர் - அதிர்ச்சி காட்சிகள்

x

அசோக் பில்லர் அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கும், இருசக்கர வாகன ஓட்டிக்கும் இடையே வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டி பேருந்தை மறித்து வாக்குவாதம் செய்த நிலையில், ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் கீழே இறங்கி இருசக்கர வாகன ஓட்டியை அநாகரீகமாக பேசியதாகக் கூறப்படுகிறது... ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுநர் தனது இருக்கைக்குக் கீழே இருந்த நீண்ட வீச்சரிவாளை எடுத்து வந்து இருசக்கர வாகன ஓட்டியை வெட்டுவதற்காகத் துரத்தியுள்ளார்... இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது... காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்