சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு... அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்

x

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவர் சச்சின் குமார் ஜெயின் கடந்த மார்ச் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 700 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், சச்சின் குமாரை ஜூனியர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் முன்பு, பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் அவமானப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையில் சச்சின் குமாரை மன சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக, பேராசிரியர் ஆஷிஷ் குமார் மீது மாணவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். உடன்படிக்கும் மாணவியை, சச்சின் உடன் சேர்த்து தவறான நோக்கத்துடன் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், நான்கரை ஆண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை, வேண்டுமென்றே ஐந்து முதல் ஆறு வருடம் வரை நீட்டிக்கும் வகையில், உள் நோக்கத்துடன் பேராசிரியர் செயல்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் தொல்லை தாங்க முடியாத சில மாணவர்கள், அந்த படிப்பை விட்டு வேறு படிப்புக்கு சென்றதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்