நேரம் குறித்து சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை

x

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரம், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திரக் கடலோரம் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்