நம்ப ஒரு வீடு.. ஏமாற்ற 10 வீடு இரக்கத்தை ரூ.15 கோடியாக்கிய நபர் - யார் இந்த கோபி சாரதி? அதிரும் சென்னை

x

சென்னையில் ஆதரவற்றோர்களுக்கு உதவுவதாக‌க் கூறி பொதுமக்களிடம் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சென்னையில், ஆதரவற்றோருக்கு உதவி கேட்டு பண மோசடி நடப்பதாக, செம்பியம் காவல் நிலையத்தில் முத்து என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் தனிப்படை போலீசார், கொளத்தூரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றின் கால் சென்டரில் கடந்த ஜனவரியில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர். விசாரணையில், 2 அறக்கட்டளைகள் பெயரில், சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கோபி சாரதி என்ற நபர் கால் சென்டர் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்றது தெரிய வந்த‌து. கீழ்ப்பாக்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்த கோபி சாரதி, பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பதாக கூறி 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌தை கண்டுபிடித்தனர். இந்நிலையில், கொடைக்கானல் பகுதியில் தலைமறைவாக இருந்த கோபி சாரதியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதுவரை எத்தனை பெயர்களில் மோசடி செய்துள்ளார்... எவ்வளவு கோடி செல்வு செய்துள்ளார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்