பிறந்தநாளுக்கு பட்டா கத்தியால் கேக் வெட்டிய பாஜக பிரமுகர் - அலேக்காக தூக்கிய போலீஸ்..

x

சென்னை வேளச்சேரியில், பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் விஜய் என்பவர், பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். கடந்த மாதம் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதுடன் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்