லேடிஸ் காலேஜ் வாசலில் பைக் வீலிங்.. சென்னையில் இளைஞர் அட்டகாசம்

x

சென்னையில், பெண்கள் கல்லூரி முன்பு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், கல்லூரி முடிந்து, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, வந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்களை சினிமா பாடலுடன் வலைதளங்களில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்