சென்னையில் மனைவியிடம் `பந்தா' காட்ட ஆம்புலன்சை கடத்திய நபர் - வெளியான காட்சிகள்

x

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் அவசர தேவைக்காக பிரபல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அம்புலன்ஸ் ஓட்டுனர் கணேசன் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது திடீரென்று அம்புலன்ஸ் மாயமானது. இது குறித்த புகாரின் பேரில், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அம்புலன்ஸில் ஜி.பி.எஸ். கருவி இருந்ததால் வாகனம் மேல்மருவத்தூர் அருகே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழுப்பேடு சுங்க சாவடியில் அம்புலன்சை மடக்கி பிடித்த போலீசார், அதனை கடத்தி சென்ற மாதவன் என்பவரை கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுனரான மாதவன், பிரிந்து சென்ற முதல் மனைவியிடம் பந்தா காட்டுவதற்காக ஆம்புலன்சை கடத்தி சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்