விமான சேவையில் திடீர் கோளாறு.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

x

சார்ஜா விமானம் மூன்று மணி நேரம் காலதாமதமாக சென்னை வந்ததால் பயணிகள் சிரமம் அடைந்தனர். சார்ஜாவில் இருந்து 142 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் சார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 3 மணிக்கு வரவேண்டிய விமானம் காலை 6 மணியளவில் சென்னை வந்தடைந்தது. இதனால் சார்ஜா செல்ல இருந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் உருவானது.


Next Story

மேலும் செய்திகள்