பஸ் ஸ்டாண்டில் `கூலாக' நின்ற இருவர்.. தூக்கிச்சென்ற போலீசுக்கு கொடுத்த அதிர்ச்சி.. சென்னை அருகே பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பைகளில் 30 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு சில்லறை விற்பனைக்காக கஞ்சா எடுத்து வந்ததும் அம்பலமானது. தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்