சென்னையில் பேரதிர்ச்சி.. கோர விபத்தில் அதிகரித்த எண்ணிக்கை.. பார்க்கும்போதே நடுங்கும் கைகள்...

x

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி அழகிரி நகரை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கல்பாக்கம் அருகே வாயலூரில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில், கார் வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்துள்ளது. மாட்டின் மீது மோதாமல் இருக்க இடதுபுறமாக திருப்பிய போது சாலையோர மரத்தில் மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ராஜேஷ், ஏழுமலை மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேர் காரில் சிக்கியிருந்த‌தால், இரும்பை அறுக்கும் எந்திரம் மூலம் காரை உடைத்து அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் 5 பேர் உயிரிழந்த‌து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்