சினிமா பாணியில் நடந்த Chasing...விருதுநகரில் டன் கணக்கில் சிக்கிய...வேட்டையில் ஷாக்கான அதிகாரிகள்
#thanthitv #virudhunagar #drug #car #police
சினிமா பாணியில் நடந்த Chasing...விருதுநகரில் டன் கணக்கில் சிக்கிய...வேட்டையில் ஷாக்கான அதிகாரிகள்
சாத்தூர் அருகே உள்ள தோட்டிலோவான்பட்டி சோதனைச் சாவடி பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மற்றும் சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது, நிற்காமல் அதிவேகமாக சென்றது. அப்போது, போலீசார் 2 வாகனங்களையும் விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் 2 வாகனங்களையும் போலீசார் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 300 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஹபிப், சஃபில் மற்றும் முத்து குமாரவேல் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story