22, 24, 26 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்! அண்ணாசதுக்கம் செல்பவர்களின் கவனத்திற்கு! |Chennai Traffic

x
  • குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26ஆம் தேதி, காமராஜர் சாலையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகே கொண்டாடப்படவுள்ளது.
  • இதனையொட்டி அன்றைய தினமும், நிகழ்சிக்கான ஒத்திகைக்காக இன்றும், வரும் 22 மற்றும் 24 ஆம் தேதிகளிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
  • அதன்படி, காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணியிலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை, வாகனங்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அடையாறு பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்களை தவிர்த்த பிற வாகனங்கள், ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வாலாஜா பாய் சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை எனவும், அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்