"தமிழகத்திற்கு காவிரி நீர் விட வேண்டும்"... கர்நாடகாவுக்கு குட்டு வைத்த ஒழுங்காற்று குழு

x

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 91 வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் டெல்லியில் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்

அப்போது கர்நாடகாவின் 4 நீர் தேக்கங்களுக்கு மொத்த நீர்வரத்து 52.84 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இதனால் காவிரியில் தங்களால் தண்ணீர் திறந்து விட இயலாது என்றும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கர்நாடகா 14 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுக்கபட்டது. இரு தரப்புகளையும் கேட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு டிசம்பர் மாதம் இறுதி வரை வினாடிக்கு 3 ஆயிரத்து 28 கன அடி வீதமும், வரும் ஜனவரி மாதம் ஆயிரத்து 30 கன அடி வீதமும் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்