ஒரே திருட்டில் செட்டிலாக பலே திட்டம்... ஆடிட்டர் வீட்டில் பணம் நகை கொள்ளை...

x
  • சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சினிமா பாணியில் ஒரு பகல் கொள்ளை நடந்திருக்கிறது.
  • கொள்ளை போனது 7.40 லட்சம் ரூபாயும் 15 சவரன் தங்க நகைகளும்.
  • சம்பவ இடத்தை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து தடையங்களை சேகரித்திருக்கிறார்கள் காவல்துறையினர். அந்த தடையங்கள் போலீசாரை தாம்பரத்துக்கு இழுத்து சென்றிருக்கிறது.
  • அங்கு தலைமறைவாகி இருந்த, மூன்று கொள்ளையர்களை போலீசார் தட்டி தூக்கியிருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் கொள்ளையின் பின்னணி வெளிச்சதுக்கு வந்திருக்கிறது.
  • கொள்ளை நடந்த வீடு தானுமல்லையா பெருமாள் என்பவருக்கு சொந்தமானது. 69 வயதான இவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இரண்டாவது தளத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
  • சம்பவத்தன்று, பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என அடையாளம் தெரியாத மூன்று பேர் தானுமல்லையா வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள்.
  • வீட்டிலிருந்தவர்கள், பத்திரைக்கை வைக்க வந்தவர்கள் யார் என்று அடையாளம் காண்பதற்குள், கத்தியை காட்டி வீட்டில் இருந்த மூன்று பேரையும் தங்கள் கண்ரோலுக்குள் கொண்டு வந்திருக்கிறது அந்த கும்பல்.
  • வீட்டை சூரையாடிய அந்த கும்பல், 15 சவரன் நகை 2.40 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கைபற்றியிருக்கிறது
  • சுருட்டிய பணமும் நகையும் போதாமல், வீட்டிலிருந்தவர்களை மிரட்டி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 5 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்திருக்கிறது அந்த கும்பல்.
  • வீட்டை விட்டு கிளம்பும் போது சிசிடிவி கேமராவின் ஹார்டிஸ்கையும் கையோடு திருட்டு கும்பல் எடுத்து சென்றிருக்கிறது.
  • நீண்ட நேரத்திற்கு பிறகு தானுமல்லையாவையும் அவரது குடும்பத்தாரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
  • தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் தம்பரத்தில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.
  • இந்த திருட்டை அரங்கேற்றியவர்கள் ஜாகீர் உசேன், விஜய், சோமசுந்தரம். நண்பர்களான மூவருக்கும் குடித்து விட்டு வெட்டியாக ஊரை சுற்றுவது தான் முழுநேர வேலை.
  • வாழ்கையில் செட்டிலாக நினைத்த மூவரும், ஒரே திருட்டில் ஓகோவென வாழ முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் குறிவைத்து ஆடிட்டர் வீட்டுக்குள் நுழைந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
  • இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்