"ராஜ போதை..! அசுர வேகம்..!"பள்ளிக்குள் பாய்ந்த குட்டி கார் அடித்து தூக்கி அந்தரத்தில் பறந்த 2 மாணவி.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்

x

திருப்பூர், வித்யாலயம் பகுதியில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளியில் ஆண்டு விழா நடப்பதையொட்டி, மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் பார்த்து வந்தனர். அப்போது, மாருதி கார் ஒன்று அதிவேகமாக பள்ளிக்குள் புகுந்த நிலையில், கட்டுபாட்டை இழந்து சீறிப்பாய்ந்துள்ளது. பள்ளி வளாகத்தில் நின்றிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி தடுமாறிய கார் , இரண்டு சிறுவர்களையும் தூக்கி வீசி கொடிக்கம்பத்தின் மீது மோதி நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பதறிப்போய் சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பெற்றோர்களும், ஆசிரியர்களும், காருக்குள் மதுபோதையில் இருந்தவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்