திடீரென மாயமான காரின் இதயம்! மெக்கானிக் ஷெட்டில் குல்லா போட்ட திருடன்! போட்டுக் கொடுத்த சிசிடிவி

x

ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூரில் செயல்பட்டு வரும் கார் ஷெட்டில், அடிக்கடி கார் பேட்டரிகள் மாயமானதால் அதன் உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார். இதனால், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஷெட்டில் சிசிடிவி பொருத்திய நிலையில், அதன் பின்னரும் கார் பேட்டரிகள் மாயமானது அவரை குழப்பமடைய செய்திருக்கிறது. உடனே, சிசிடிவி பதிவுகளை உரிமையாளர் சோதனையிட்ட போது, கார் ஷெட்டுக்குள் பதுங்கிய படி நுழைந்த மர்மநபர் ஒருவர், ஷெட்டிலிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 20 பேட்டரிகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், கொள்ளையரை தேடி வரும் நிலையில், சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்