BREAKING || சைலேந்திர பாபு TNPSC தலைவராக நியமனம் செய்யும் விவகாரம் - தமிழக அரசின் அடுத்த மூவ்

x

சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் கவர்னர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து மீண்டும் ராஜ் பவனுக்கு அனுப்பியது தமிழக அரசு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். எனினும் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை

டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. தற்போது நான்கு உறுப்பினர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன . இதனால் அரசு பணிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வதில் தேக்கநிலை ஏற்பட்டு இருப்பதாக பல தரப்பிலும் புகார் எழுந்திருக்கிறது

இந்த நிலையில், அண்மையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, tnpsc தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கும் தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது . இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், சைலேந்திரபாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருந்தது அதற்கும் தமிழக அரசு உரிய பதிலை அளித்து, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

தற்போது ஆளுநர் கேட்ட விளக்கங்களையும் கோப்புகளாக தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்