"பாய் ஃபிரண்ட், கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்" - ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவர் பரபரப்பு கருத்து

x

"திருமணத்தில் தாலி கட்டும்போது மணமகள் சுரிதாரிலும் , மணமகன் டீ-சர்ட்டிலும் இருக்கின்றனர் : திருமண விழாவில் பெண்கள் பட்டுப்புடவைதான் அணிய வேண்டும் "

"பிள்ளைகள் பெற்றோரை வணங்குவதில்லை , பாய் ஃபிரண்ட் , கேர்ள் ப்ரண்ட் கலாசாரத்தை தடுக்க வேண்டும் : பாப் இசைப் பாடல்களை கேட்காமல் வீடுகளில் , கர்நாடக இசையை மட்டுமே கேட்க வேண்டும்"

"தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது : தமிழ்நாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பார்கள்"

" மதம் கடந்த திருமணத்தை ஆர்எஸ்எஸ் வெறுக்கவில்லை : முறையாக ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் , ஆனால் முறையான பயிற்சி பெற்றனரா என்பதை ஆன்மிக பெரியோர்தான் முடிவு செய்ய வேண்டும் "

"அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை ஜனவரி 22 ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது : ராமர் கோயில் விழாவில் பங்கேற்குமாறு ஜனவரி 1 முதல் 15 வரை வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்க உள்ளோம்"

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி பேட்டி

குஜராத் மாநிலத்தில் கடந்த 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அந்த அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ,

குமாரசாமி - ஆர்எஸ்எஸ் வட தமிழக தலைவர்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வருடாந்திர செயற்குழு கூட்டம் குஜராத்தில் நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 7 ம் தேதி வரை நடைபெற்றது.

1925 ல் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது, அடுத்த ஆண்டு நூற்றாண்டை எட்டவுள்ளது. ஓராண்டு முழுவதும் , நூற்றாண்டு விழாவை நடத்த உள்ளோம் . சமூகத்தில் பல மாற்றத்தை ஏற்படுத்திய அமைப்பு ஆர்எஸ்எஸ் , சாதி , மத , மாகாண வேறுபாடு இல்லாமல் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள இயக்கம் ஆர்எஸ்எஸ்.

இளைஞர்கள் இடையே ஆர்எஸ்எஸ் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பல குடும்பங்கள் ஆர்எஸ்எஸ் குடும்பமாக மாறியுள்ளது , மலைவாழ் மக்கள் வாழும் கிராமம் முதல் பெருநகரம் வரை ஆர்எஸ்எஸ் கிளைகள் அமைந்துள்ளன.

உலகில் 65 நாடுகளுக்கும் மேல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகள் அமைந்துள்ளன , உலகம் தழுவிய அமைப்பாக ஆர்எஸ்எஸ் மாறியுள்ளது.

5 துறைகளில் சமூக மாற்றத்தை கொண்டுவர கவனம் செலுத்த உள்ளது ஆர்எஸ்எஸ் ,

சாதி , மத , மாகாண வெறிகளை மறந்து சமூக நீதியை நிலைநாட்டி , சமூக நல்லிணக்கத்தை கொண்டுவருவது .

வெளிநாட்டு பண்பாட்டு தாக்கத்தால் பல குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தை இழந்து வருகிறது , தாய் , தந்தையரை பிள்ளைகள் வணங்குவது இன்று நீர்த்துப்போய் விட்டது. மகன்கள் கிரிக்கெட் விளையாடுவது , பாய் பிரண்ட் , கேர்ள் பிரண்ட் வைத்துக் கொள்வதால் அதை கண்டிக்கும் தந்தையை எதிரியாக பார்க்கின்றனர். இவற்றை தடுக்க வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும். அனைத்து குடும்பத்திலும் இதுபோன்ற மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற குணம் அனைத்து குடும்பத்திற்கும் வர வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் , நீர் மாசுபாட்டை குறைத்து சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

சுதேசி தன்மையுடன் வாழ வேண்டும் , நம் மொழியில் பாதி ஆங்கில கலப்பு உள்ளது , ஆங்கிலத்தில் பிள்ளைகள் பேசுவதை பெருமை என நினைக்கிறோம் . தாய் மொழியான தமிழ் மீது அபரிமிதமான பற்று இருக்க வேண்டும். திருமணத்தில் தாலி கட்டும்போதுகூட மணமகள் சுரிதாரிலும் , மணமகன் டி சர்டிலும் நின்று கொண்டிருக்கின்றனர்.

வேட்டி , பட்டாடை அணிந்து திருமணத்தில் பங்கேற்க வேண்டும் , வீடுகளில் பாப் இசை இல்லாமல் , கர்நாடக இசையை ஒலிக்க செய்ய வேண்டும்.

இன்று உரிமைக்காக போராடும் தனி மனிதன் தனக்கான சமூக கடமைக்கு முக்கியத்துவம் தருவதில்லை , சமூக ஒழுங்கு , கட்டுப்பாட்டுக்கு தனது கடமையை சமூக பொறுப்புடன் அனைத்து குடிமக்களும் பின்பற்ற வேண்டும்...

இந்த 5 துறைகளில் சமூக மாற்றத்தை கொண்டுவர ஆர்எஸ்எஸ் முயற்சி எடுக்கும்.

அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை ஜனவரி 22 ல் பிரதிஸ்டை செய்யப்பட உள்ளது , பகல் 12 - 2 மணிக்குள்.

ஜன 1 முதல் 15ம் தேதி வரை வீடுவீடாக சென்று அயோத்தி ராமர் கோயில் , ராமர் சிலை பிரதிஸ்டையில் பங்கேற்க வர வேண்டும் என்ற அழைப்பிதழையும் , ராமர் கோயில் அட்சதையையும் வழங்க உள்ளோம். அனைத்து கோயில்களிலும் , மங்களகரமான இடங்களிலும் ராமர் மந்திரத்துடன் பஜனை நடத்த உள்ளோம்.

அனைத்து மாவட்டங்களிலும், கிராமங்களிலும் ஆர்எஸ்எஸ் கிளை உள்ளது. அனைத்து தரப்பினரும்

நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தினசரி கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் 2400 ஊர்களில் நாள்தோறும் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடக்கிறது , கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்துள்ளனர் . முன்பு தமிழகத்தில் சங்க வளர்ச்சி மந்தமாக இருந்தது ,இப்போது நல்ல வரவேற்பு உள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணி , ஊர்வலத்திற்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறை அனுமதி தரவில்லை , நீதிமன்றம் அனுமதி தந்த பிறகும் தமிழக அரசு தடை கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றது , ஆனால் உயர் நீதிமன்றம் கூறியவாறு ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.

1931 ல் தமிழகத்தில் சங்கம் தொடங்கப்பட்டது , ஜெயலலிதா முதல்வராக இருந்த கடைசி 3 ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது , கருணாநிதி முதல்வராக இருந்தபோது 20 நாள் ஆர்எஸ்எஸ் முகாம் தமிழகத்தில் நடந்தது. ஊர்வலத்திற்கு கருணாநிதி அனுமதி கொடுத்தார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆண்டு சந்தா இல்லை , எத்தனை பேர் அமைப்பில் இருக்கின்றனர் என நாங்கள் குறித்து வைத்துக்கொள்வதில்லை. தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பார்கள்.

ஆகம விதிப்படி பயிற்சி பெற்ற யாரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதே எங்கள் சங்க விதி , கிராம கோயில்களில் பல சாதியினரும் அரச்சகர்களாக உள்ளனர். முறையாக பயிற்சி பெற்றனரா என்பதை ஆன்மிக பெரியோர் குழுதான் முடிவு செய்ய வேண்டும் .

உதயநிதி சனாதனம் குறித்து பேசியது குறித்து வட நாட்டு தலைவர்கள் தனிப்பட முறையில் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.

திமுகவில் உள்ள பலர் சனாதனத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என எங்களிடம் தனிப்பட்ட முறையில் கூறி வருகின்றனர்.

அனைத்து சாதிகளும் நல் இணக்கத்தோடு வாழ வேண்டும் , பெயருக்கு பின் சாதிப்பட்டம் போட்டபோது சாதி பிரச்சனை இல்லை , ஆனால் இன்று பட்டம் போடுவதில்லை , சாதி பிரச்சனை இருக்கிறது.

பொருளாதார ரீதியாக சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வு இருப்பது இயல்பானதுதான்.

மதம் மாறி திருமணம் செய்வதை நாங்கள் வெறுக்கவில்லை , ஆனால் அந்த காதல் உண்மையான காதலாக இருக்க வேண்டும். சொத்துகளை கவருவதற்காக இந்துப் பெண்களை திருமணம் செய்ய கூடாது. ..

என்று கூறினார்


Next Story

மேலும் செய்திகள்