தமிழக அரசின் செயலை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம்

x

கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில், கடலூர் பா.ஜ.க.வின் பட்டியல் அணியினர் பிச்சை எடுத்து நிதி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்டியலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவர்களிடம், போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் பா.ஜ.க.வினர் உண்டியல் ஏந்தி பிச்சை எடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு வேறு பணிகளுக்கு தவறாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மாவட்ட பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு, கைகளில் உண்டியல் ஏந்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு, பாஜகவின் பட்டியல் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜகவினர், பிச்சை எடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்