கஞ்சா ஆசாமிகள் அட்டூழியம் - சேலம் அருகே பரபரப்பு

x

ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த லோகநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை, செம்மாண்டப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே, கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கினர். இதனை அறிந்த லோகநாதன் மற்றும் பாலாஜியின் உறவினர்களையும், அந்த கும்பல் கட்டை மற்றும் இரும்பு கம்பயிால் தாக்க, 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமைறைவாக இருந்த தங்கராஜ், சர்மா, ரவி, கோபி, மோகன்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா போதையைில் ரவுடித்தனம் செய்ததாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அந்த 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்