ஆசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர் நச் பதில் | Anbil Mahesh

x

இதற்காக www.trb.tn.gov.in என்ற

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நவம்பர் ஒன்று முதல், நவம்பர் 30 ஆம் தேதி வரை போட்டி தேர்வுக்கு பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பிலிடம், ஆசிரியர் நியமன விவகாரத்தில் , டெட் ஆசிரியர்கள் எதிர்ப்பு குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்றும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆசிரியர் நியமனங்களை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் பதிவு துவங்கக்கூடிய நிலையில், அரசு இனி மேல் புதிய முடிவை எடுக்கும் பட்சத்தில், அறிவிக்கப்பட்டபடி போட்டி தேர்வு நடைபெறுமா அல்லது ரத்தகுமா? ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்? என்ற பல கேள்விகள் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்