அண்ணா பல்கலை. கண்காணிப்பு ட்ரோன்களுக்கு காப்புரிமை வழங்கிய மத்திய அரசு | Anna University

x

அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை இயக்குனர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், கடந்த 2018-ஆம் ஆண்டு கண்டுபிடித்த கோபுர கண்காணிப்பு ட்ரோன்களுக்கு மத்திய அரசு காப்புரிமை அளித்திருக்கிறது. 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பறக்கும் சக்தி கொண்ட இந்த வகை ட்ரோன்களை, அவசர கால பேரிடர் பகுதிகளிலும், மருந்துகளை கொண்டு செல்வதிலும், முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம். இந்த ட்ரோன்களுக்கு காப்புரிமை அளித்துள்ள மத்திய அரசு, கடந்த 30-ஆம் தேதி, அதற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்