நண்பரின் மனைவியை தவறாக பேசியதால் ஆத்திரம்...போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை...

x

இராமநாதபுரம்

அரசு பேருந்து ஓட்டுனர் கொடூர கொலை...

தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்கள்...

நண்பரின் மனைவியை தவறாக பேசியதால் ஆத்திரம்...

போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து கொலை...

அரசு பேருந்து ஓட்டுநர் தலை சிதைத்து கொடூரமா கொல்லப்பட்டிருக்காரு. போலீஸ் விசாரணையோட முடிவு கடைசியில அவரோட நண்பர்களையே கை காட்டியிருக்கு என்ன நடந்திருக்கும்? ஏன் இந்த கொடூர கொலை?

பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த கோவில் வீதியில், பதைபதைக்கும் நெஞ்சோடு மக்கள் கூடியிருந்தனர்.

காரணம் முகம் சிதைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு ஆண் சடலம்...


கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கிறது... ஐயோ என்ற அலற சத்ததால் திரண்ட மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

கொல்லபட்டவர் இராமநாதபுரத்தை சேர்ந்த முகனன். அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். எட்டு மணி நேரம் முகனன் டிரைவராக இருந்தாலும், மீதி நேரம் போதை மகனாக இருந்திருக்கிறார்.


சம்பவ நாளன்று மாலை பணி முடிந்தது வீட்டுக்கு வந்திருக்கிறார் முகனன். வழக்கம் போல் அரண்மனை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில், மது வாங்கி நண்பர்களுடன் அருந்தியிருக்கிறார். அதன் பிறகு தான் முகம் சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

போலீசாரின் முதற்கட்ட விசாராணை, முகனனின் நண்பர்களை சுற்றியே சுழன்றிருக்கிறது. சம்பவத்தன்று இரவு முகனனோடு கருணாமூர்த்தி, மாரிஸ்வரன் ஆகிய இருவரும் மது அருந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். போலீசாரின் சந்தேகம் வீண் போகவில்லை. இவர்கள் இருவரும் தான் முகனனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.


மதுவால் ஒன்று சேர்ந்த மூன்று நண்பர்களும், போதை தலைக்கேறும் வரை குடித்திருக்கிறார்கள். நிலையில்லா போதையில் நடை தடுமாறுவது போல, முகனின் வார்த்தைகள் தடுமாறி இருக்கிறது.

உச்சகட்ட போதையில் இருந்த முகனன், பேச்சு வாக்கில் அவரது நண்பரான கருணாமூர்த்தியின் மனைவியை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கருணாமூர்த்தி முகனனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வாக்குவாதம் அப்படியே கைகலப்பாக மாறியிருக்கிறது.

கருணாமூர்த்தியோடு மாரிஸ்வரனும் சேர்ந்து கொள்ள இருவரும் முகனனை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். அதன் பிறகும் வெறி அடங்காமல் முகனனை கீழே தள்ளி பெரிய பாறாங்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டிருக்கிறார்கள்.

தலை பிழந்து முகனன் சம்பவ இடத்திலேயே இறந்து போயிருக்கிறார். கருணாமூர்த்தியும், மாரிஸ்வரனும் தப்பி சென்றிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், முகனனின் நண்பர்களான கருணாமூர்த்தியையும், மாரிஸ்வரனையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்