"40-க்கு 40-ல் திமுக தான்" - அன்பில் மகேஷ் அதிரடி பேட்டி

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், கோயிலுக்குள் சென்று மூலவர் முருகனை அமைச்சர் வழிபட்டார். தொடர்ந்து, சண்முகர் பெருமாள் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், 40 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்