தலைநகரின் புகழ்பெற்ற கோயிலுக்கு மனைவியுடன் சென்ற இந்திய மாப்பிள்ளை

x

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அக்‌ஷர்தாம் கோயிலில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபட்டார். ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி வந்த ரிஷி சுனக், அவரது மனைவி அக்‌ஷதா ஆகியோர், இன்று காலை அக்‌ஷர்தாம் கோயிலில் வழிபாடு செய்தனர். அக்‌ஷர்தாம் கோயிலின் கண்கவர் கட்டிடக்கலையை ரிஷி சுனக் கண்டுரசித்தார். பிரிட்டன் பிரதமர் வருகையை முன்னிட்டு, கோயில் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்