அமெரிக்காவில் தமிழக தம்பதி த*கொலை.. US-ல் சித்தி நடத்திய சட்டப் போராட்டம் -பாசத்துடன் வென்ற நீதி..!

x

அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை மீட்டு வந்த சித்தியை உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார்-தமிழ்ச்செல்வி தம்பதி அமெரிக்காவில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டனர். அனாதையான அவர்களது ஒன்றரை வயது குழந்தை விஸ்ருத், உறவினர்களின் சம்மதம் இல்லாமல் வேறொருவருக்கு தத்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்செல்வியின் தங்கை அபிநயா அமெரிக்கா சென்று சட்ட போராட்டம் நடத்தினார். தமிழ்நாடு அயலக தமிழர் நல வாரியத்தின் உதவியுடன் 2 ஆண்டுகள் கழித்து குழந்தை விஸ்ருத் அவருடைய சித்தியிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து 4 வயது குழந்தையுடன் சென்னை வந்த அபிநயாவை அயலக நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்