"விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் கோர முடியாது" - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

திருமணத்திற்குப் பிறகு மனைவி மதம் மாறியதால், திருமண உரிமைகளின்படி மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு, இந்து மரபுப்படி திருமணம் நடந்த நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இறந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு, குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி, நிவாரணம் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் திருமணத்தின்போது கணிசமான தொகை மற்றும் வரதட்சணையாக தங்கம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், மனைவி தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே விலகிச் சென்றதாக கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனைவியின் மனுவை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, மனைவி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம், மனைவிக்கு 4 லட்ச ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மற்றும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், இந்து மத முறைப்படி திருமணம் நடந்த நிலையில், விவாகரத்து பெறுவதற்கு முன்பாகவே மனைவி மதம் மாறியதை சுட்டிக்காட்டி சிவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.


Next Story

மேலும் செய்திகள்