அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் அதிரடி முடிவு - வெளிவந்தமுக்கிய தகவல்

x

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் பரமசிவம் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாசறை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படாததைக் கண்டித்து அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல களப்பணியாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்