"ஏய்.. உன்ன காலி பண்ணிடுவேன்" கேட்டை உடைத்து....அதிமுக நிர்வாகியை வீடு புகுந்து மிரட்டிய பிரபல ரவுடி..! தீயாக பரவும் வீடியோ.. குமரி பரபரப்பு

x

குழித்துறை அருகே பாலவிளை பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர், அதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க குமரி மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜபத்திரன் என்பவர், கடந்த ஆண்டு கூலிப்படைகளை வைத்து தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பீட்டர், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை திரும்பப் பெற வேண்டி, ராஜபத்திரன் பீட்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிற்கு கறுப்பு நிற காரில் வந்த நபர், வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கதவு, கேட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன், வழக்கை திரும்ப பெறவில்லை எனில் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்