"நடவடிக்கை எடுக்கப்படும் " - பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை..

x

காலி மனை பதிவின்போது, கட்டிடம் இருந்தும் காலியிடம் என பதிவு செய்தால் சார்பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, பதிவுத்துறை துணைத்தலைவர், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்டிடம் இருப்பது குறித்து ஆவணங்களில் குறிப்பிடாமல் காலிமனை இடங்களாகவே பதிவு செய்யும் நிலை தொடர்வதாக புகார்கள் வந்ததால் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். காலிமனை என பதிவுக்கு வரும் ஆவணங்களில் அந்த இடத்தை எளிதில் அறியும் வண்ணம் ஜியோ- கோஆர்டினேட்ஸ் உதவியுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆவணப் பதிவின்போது வீடு இருந்து தற்போது அதை இடித்து காலிமனையாக பதிவு செய்யும் நிகழ்வுகளிலும் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கட்டிடம் இருந்தும் அதனை களப்பணி பார்க்காமல் காலியிடமாக பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அந்த உத்தரவில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்