ஆவின் குடிநீர்... அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | Aavin | Thanthi TV

x

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், பால் உற்பத்தியாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 36 கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த ஆண்டு 39.40 கோடி ரூபாய்க்கு கோடையில் பால் பொருட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 48 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆவின் குடிநீர் விற்பனை குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்