தமிழகத்தை பதறவைத்த ஒற்றை வீடியோ... சிக்கிய பிரபல யூடியூபர் - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

x

பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போல் வீடியோ வெளியிட்ட யூடியூபர் மனிஷ் காஷ்யப் மீது பதியபட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது சகோத‌ர‌ர் திரிபுராரி குமார் திவாரி என்கிற மனிஷ் காஷ்யப், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில், கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த 5 நாட்களில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அதனால், அந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல், விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளதாக கூறினர். இதனால், அவர் மீது பதியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த‌தோடு, சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கைப்போல் நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்