சென்னை பல்கலைக்கழகத்திற்கு "A++" தர மதிப்பீடு

x

நாட்டில் உள்ள உயர் கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் மற்றும் தர மதிப்பீட்டு அமைப்பு, "ஏ பிளஸ் பிளஸ்", "ஏ பிளஸ் ஏ" உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர மதிப்பீட்டை வழங்குகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு "ஏ" மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதனை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு "ஏ பிளஸ் பிளஸ்" தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. ஆராய்ச்சி, தேர்ச்சி விகிதம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் அடிப்படையில் தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்