கடைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்... ராணிப்பேட்டையில் பயங்கரம்

x

வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பெட்டி கடை நடத்தி வருபவர் சிவலிங்கம். 75 வயது சாமியாரான இவர், தனது கடைக்கு நூடுல்ஸ் வாங்க வந்த 9 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதால், கோபமடைந்த பெற்றோர், கடைக்கு வந்து சிவலிங்கத்திடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், சிவலிங்கத்தை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்