திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி... துடி துடித்து பலியான தொழிலாளி.. கொட்டும் மழையில் போராட்டம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பலத்த மழை பெய்த நிலையில், சுப்பிரமணி என்பவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மின் கம்பத்தில் இருந்து மின் வயர் அறுந்து சுப்பிரமணி மீது விழுந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததால் துடித்த சுப்பிரமணியை, பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுப்பிரமணியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், கொட்டும் மழையில் ஆற்காடு -வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மின் வயர்கள், மின் கம்பங்களை பராமரிக்காமல் மின்வாரியம் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். தகவலறிந்து விரைந்த போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்