திடீரென தீயாய் பரவும் புது காய்ச்சல்.. தமிழக சுகாதார துறை பரபர ரிப்போர்ட்

x

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது...

தமிழகத்தில் நடப்பாண்டில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், 893 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது... கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் 2 ஆயிரத்து 827 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோய் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

அண்மையில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு கல்லீரல் செயலிழப்பு, நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட இணை நோய்களின் தீவிரம் இருந்தது... ஹெச்1 என் 1, ஹெச் 2 என்3 போன்ற பல்வேறு வகையான "இன்ஃப்ளூயன்ஸா" வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மாறுபட்ட சீதோசன நிலைகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நோய் பாதிப்பு குறைவாகவே கண்டறியப்பட்டு வருகிறது... பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரைத் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிப்பது, மற்றும் இருக்கைகளைத் தூய்மையுடன் பராமரிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அனைத்து இடங்களையும் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்