தலையை தூக்கி சீறிய 15 அடி நீள ராஜநாகம் - ஒரே அமுக்காக அமுக்கிய வனத்துறையினர்

x

குமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையருகே, 15 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில், அவ்வப்போது மலைப்பாம்பு உள்ளிட்ட வன உயிரிகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுவது வழக்கம். அந்த வகையில் பெருஞ்சாணி அணையையொட்டிய பகுதியில், கால்வாய் கரையோரம் ராஜ நாகம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், 15 அடி நீள ராஜ நாகத்தை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்