"420-க்கள் தான் 400 சீட் ஜெயிப்போம் என்பார்கள்" - பாஜகவை சீண்டும் பிரகாஷ் ராஜ்

x

தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவோம் கூறும் கட்சிகள் திமிர்ப்பிடித்தவை என பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். சிக்மகளூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 420 மோசடி செய்தவர்கள்தான் 400 சீட்களைப் பற்றி பேசுவார்கள் எனக் கூறினார். எந்தக் கட்சியாக இருந்தாலும் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவதாகக் கூறுவது, ஆணவத்தின் பிரதிபலிப்பு என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்