3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம்..கிராம மக்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு

x

ஓசூர் அருகே பத்திகவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் காலனி மக்கள் ஒன்றரை சென்ட் நிலம் ஒன்றினை கோயிலுக்காக வாங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தை பேசி முடித்த கிராம மக்கள், நிலத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுத்திருக்கின்றனர். அந்த நிலம் திடீரென வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்தது. நிலம் கைமாறுவதற்கு தங்கள் காலனியை சேர்ந்த திம்மராயன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறி அவரையும், அவரது சகோதரர் மற்றும் தாயின் குடும்பத்தை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மூவரின் வீடுகளுக்கு செல்லும் வழித்தடங்களை முள் வேலிகளால் மறித்தும், அவர்களுடன் யாராவது பேசினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், இரு தரப்பையும் காவல்நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கிராம மக்கள் 9 பேர் மீது வழக்குபதிவு செய்து எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்