காங்கிரஸில் ராஜ்யசபா எம்.பி. சீட் யாருக்கு? - கட்சிக்குள் கடும் போட்டி

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், அப்பதவியை பெற ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
காங்கிரஸில் ராஜ்யசபா எம்.பி. சீட் யாருக்கு? - கட்சிக்குள் கடும் போட்டி

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், அப்பதவியை பெற ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதைத் தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக போட்டியிடும் 4 இடங்களில், ஒரு ராஜ்யசபா எம்.பி.பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ப. சிதம்பரத்தின் பதவிக்காலமும் முடிவடைய இருப்பதால், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற மூத்த தலைவர்களும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற களத்தில் உளள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்