'அப்பா என்னா வெயிலு!' - ஷவரில் உற்சாக குளியல் போடும் சக்தி விநாயகர்

அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி அரியலூர் சின்ன கடைத் தெருவில் உள்ள பால பிரசன்னா சக்தி விநாயகர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
x
அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி அரியலூர் சின்ன கடைத் தெருவில் உள்ள பால பிரசன்னா சக்தி விநாயகர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 2 அடி உயர விநாயகர் சிலையை சுற்றி கண்ணாடித் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் பன்னீர் மற்றும் வெட்டி வேர் கலந்து செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக இது போல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அக்னி நட்சத்திரத்தின் போது மழை வேண்டி இவ்வாறு செய்யப்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும் கண்ணாடித் தொட்டிக்குள் அபிஷேகம் செய்யப்பட்ட விநாயகரை பக்தர்கள் பார்த்து ரசித்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்